perambalur-malavarayanallur-mass-conduct-mla-rtr
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மழவராயநல்லூர் ஊராட்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அத்திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் முழுமையாக தெரிந்துகொண்டு, அத்திட்டங்களின் வாயிலாக தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதன்படி மக்கள் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் அனைத்து அரசு அலுவலர்களும் இது போன்ற முகாம்கள் மூலமாக கிராமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.3,260 வீதம் ரூ.6,520 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், ஊராட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19 திட்டங்களுக்கு ரூ. 37,28,500- மதிப்பிலான காசோலைகளையும்,

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிவறை அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.2,51,954- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.5,87,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் துறையின் சார்பில் 15 நபர்களுக்கு ரூ.7,40,025- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் கீழ் 4 நபர்களுக்கு 21,347- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 4 நபர்களுக்கு ரூ.23,43,368- மதிப்பில் வாகனங்கள் வாங்குவதற்கான நலத்திட்ட உதவிகளையும்,

தோட்டக்கலைத்துறையின் சார்பில் 24 நபர்களுக்கு ரூ.19,63,400- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புது வாழ்வு திட்டம் மூலம் 5 நபர்களுக்கு அமுதசுரபி கடனாக ரூ.1,25,000- தொகையும், மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் இலவச சக்கர நாற்காலி வழங்கும் திட்டம், இலவச கறுப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கும் திட்டம் மற்றும் இலவச மோட்டார் பொருத்திய ;தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.9,470- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

சாலை விபத்து நிவாரண நிதியாக 9 நபர;களுக்கு 8,00,000 மதிப்பில் காசோலைகளையும், 16 பயனாளிகளுக்கு ரூ1,60,000- மதிப்பிலான நத்தம் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், விபத்து நிவாரணத் தொகையாக 12 நபர;களுக்கு ரூ.12,30,000 மதிப்பிலான உதவித்தொகையையும், இயற்கை மரண உதவித் தொகையாக 197 பயனாளிகளுக்கு ரூ.24,62,500 மதிப்பிலான உதவித்தொகையையும், திருமண உதவித்தொகையாக 504 நபர்களுக்கு ரூ.41,52,000 மதிப்பிலான உதவித்தெகைகளையும்,
வேளாண்த்துறையின் மூலமாக மாவட்ட நீவாடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பயிர் செயல் விளக்கம், விசைத்தெளிப்பான், பேட்டாp விசைத் தெளிப்பான், தீவனப்புல் நொறுக்கும் கருவி வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை 77 பயனாளிகளுக்கு ரூ.8,04,475- மதிப்பில் என 919 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 93 இலட்சத்து 86 ஆயிரத்து 59 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா;(பொ) திரு.துரை அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் அனைத்து துறைகளின் அலுவல பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!