Mother and child welfare plea to the Government’s flagship hospital of the 2nd vehicle
பெரம்பலூர் : தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தமிழ்நாடு கிளை செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவச தாய் சேய் நல வாகனம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது.

இச்சேவையினை மேம்படுத்தும் வகையில் புதிய தாய்சேய் நல வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதன் மூலமாக அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த தாய்மார்களையும், பச்சிளம் குழந்தைகளையும் அவரவர் இல்லங்களில் பாதுகாப்பாக ஒப்படைக்க இத்திட்டம் செயல்படுத்தப்டுகிறது.

ஒரு வயதுக்கு உட்பட்ட பச்சிளங்குழந்தைகளை சிகிச்சைக்குப்பின் அவரவர் இல்லங்களில் ஒப்படைக்கும் பணியும் செயல்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் இலவச சேவையாகும்.

2016ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலத்தில் 1,850 தாய்மார்கள் பாதுகாப்பாக அவரவர் இல்லங்களில் இறக்கிவிடும் பணி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பயனாளிகள் நலன் கருதி இரண்டாவது வாகனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் வரதராஜன், கௌரவ செயலாளர் ஜெயராமன், மருத்துவர் தங்கராஜு, பொறியாளர் கருணாமூர்த்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன், இருக்கை மருத்துவர் தா;மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த மேலும் தொடர்புக்கு செயலர் நா.ஜெயராமன் என்பவரை 9443765563 என்ற எண்ணிலும், ஓட்டுநர் செல்வகுமார் என்பவரை 8144158102 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!