இது குறித்து நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது;

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பாக மனித கழிவுகைள அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளளோர் மற்றும் அவர்களை சார்ந்தோர் சுகாதார மற்ற கழிப்பிடங்களில் மற்றும் கழிப்பிடங்களிலும் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளோரை கண்டறியும் கணக்கெடுப்பு பணி ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது விடுப்பட்ட நபர்கள் எவராவது இருப்பின் அவர்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்பு பணியானது நமது பெரம்பலூர் நகராட்சியில் 22.02.2016 அன்று துவங்கி 24.02.2016 அன்று வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகம், கனரா வங்கி அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இக்கணக்கெடுப்பு சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் திறந்த வெளி கால்வாய்கள் கழிவு நீர் தொட்டிகள் (ளுநயவiஉ வுயமௌ) மற்றும் இரயில்வே பாதைகளில், உள்ள மனித கழிவுகளை சுத்தம் செய்தல், அகற்றல் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளவர்களை கண்டறிவதற்காவும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது.

இக்கணக்கெடுப்பில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு முழுமையான மற்றும் சரியான தகவல்களை அளிக்குமாறு கோரப்படுகிறது. படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அலுவலர்கள் உதவி செய்வார்கள் இக்கணக்கெடுப்பு தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும் பொது மக்களுக்கு தெரிய படுத்த நகரின் 6 முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டு ஆட்டோவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொது மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரையும் இக்கணகெடுப்பு பணியில் பங்கேற்று பயன்பெறவேண்டும்.

இவ்வாறு நகராட்சி ஆணையர் முரளி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!