loan மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ, மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜுலை 30 , ஆக 1. மற்றும் ஆக.20 ஆகிய தினங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கல்விகடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த கல்விக்கடன் வழங்கும் முகாம் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக் கடன் பெறுவதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் 30.07.16 அன்று பெரம்பலூர், வேப்பூர் வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களும்,

01.08.16 அன்று வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாரங்கள் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும்,

மேலும் 20.08.16 அன்று நடைபெறும் கல்விக்கடன் முகாமின் போது மாவட்டம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் 30.07.2016, 01.08.2016 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களில் கலந்துகொள்ள இயலாதவர்களும் இந்த முகாமின் போது கலந்து கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் ( BONAFIDE CERTIFICATE ), கல்லூரி மூலம் வழங்கப்பட்ட கட்டண விவரம் (FEES STRUCTURE) ) பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவக்கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூhpகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த கல்விக்கடன் முகாமிற்காக விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலகம், புதுவாழ்வு திட்ட அலுவலகம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயல்பட்டு வரும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஆகியவற்றின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. முகாம் குறித்த மேலும் விபரங்களுக்கு 94450-00610 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!