Power outage at Esanai, Siruvachchur and Krishnapuram substations!
எசனை துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் பி.செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட, எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ.16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
இத போல் கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் வினியோகம் நாளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.