Public demand to Chief Minister to set up 9 new police stations in Perambalur district!

பெரம்பலூர் கடந்த 25 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல் காரணமான நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப ஒரு சில கட்டமைப்பு வளர்ந்து வந்திருந்தாலும், காவல் துறை மட்டும் மாறவில்லை. அதனால் குற்ற சம்பவங்கள் நடக்கும் போது தடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

பெரம்பலூர் காவல் நிலையத்தை பிரித்து, பெரம்பலூர் நகரத்திற்கு தனியாகவும், எசனை, அம்மாபாளையம் (திட்டம் கிடப்பில் உள்ளது), சிறுவாச்சூர் என 4 காவல் நிலையங்காகவும், அரும்பாவூர் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து கிருஷ்ணாபுரத்தில் ஒரு காவல் நிலையமும், குன்னம் காவல் நிலையத்தை பிரித்து வேப்பூரில் ஒரு காவல் நிலையத்தையும், மங்களமேடு காவல் நிலையத்தை பிரித்து அகரம்சிகூரில் ஒரு காவல் நிலையத்தையும், மருவத்தூர் காவல் நிலையத்தை பிரித்து கொளக்காநத்தத்தில் ஒரு காவல் நிலையத்தையும், பாடாலூர் காவல் நிலையத்தை பிரித்து செட்டிக்குளம், அடைக்கம்பட்டியில் கூடுதலாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள், சமூக ஆர்வர்கள், போலீசார் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கண்டும்காணாமல் விட்டு வருகிறது. எனவே, தற்போது காவல் துறைக்கும் சேர்த்து மந்திரியாக இருந்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பரீசிலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய காவலர்கள் இல்லாதததால், குற்ற சம்பவங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை நிலைநிறுத்த குறைந்த அளவு போலீசார் திணறி வருகின்றனர். மேலும், பலர், அளவிற்கு அதிகமான நேரம் பணி செய்வதால், மனஅழுத்தத்தில் இருப்பதோடு, குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

எனவே, முதலமைச்சர், கூடுதல் காவல் நிலையங்களை உருவாக்கி பொதுமக்கள், போலீசாரின் சிரமத்தை குறைக்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதோடு, குற்ற சம்பவங்களை தடுக்க, விபத்துகளை விசாரிக்க தொடர்ந்து செயல்படும் வகையில், கோனேரிப்பாளையம், எளம்பலூர், தண்ணீர் பந்தல், 4 ரோடு பகுதிகளில் புதிய புறக்காவல் நிலையங்களையும் போலீசாருக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!