Rain in Perambalur district: Cell tower burned in fire

வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாகவே, இன்று தொடங்கிய பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் உட்பட கவுள்பாளையம், குன்னம், வேப்பூர், எளம்பலூர், வாலிகண்டபுரம், மங்களமேடு, சின்னாறு, வி.களத்தூர், கை.களத்தூர், வேப்பந்தட்டை, பாடாலூர், செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இந்த கனமழையின் போது, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பெருநிலா கிராமம், காட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரின் மனைவி கவிதா(48), என்பவர் தனது வீட்டில் இருந்து மாட்டு கொட்டகைக்கு பால் கறப்பதற்காக சென்ற போது, இடி தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் ரோவர் கல்லூரி முன் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது இடி விழுந்தது.

இதில் அதிக அளவில் மின்சாரம் பாய்ந்து, செல்போன் டவருக்கு கீழ் உள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், தளவாட பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து பொது மக்கள் அளித்த தகவலின் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து கண்ட்ரோல் ரூமில் பற்றி எரிந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த திடீர் விபத்தினால் எளம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!