Science exhibition on behalf of education dept

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் திறந்து வைத்தார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை இன்று தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில், நிறுவனர் அ.சீனிவாசன் முன்னிலையில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உணவு, உலோகங்கள், நம்மைச் சுற்றி வாழ்பவை, நகரும் பொருட்கள், மனிதர்கள் ஆலோசனை, பொருட்கள் இயங்கும் விதம், இயற்கை காரணிகள், இயற்கை வளங்கள் மற்றும் நம் அன்றாட வாழ்வில் கணிதம் உள்ளிட்ட தலைமைப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட 125 அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுகுமாறன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செ.காமராசு, மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!