Special Grievance Day for the Disabled People: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் எதிர்வரும் 25.02.2019 அன்று காலை 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!