Students receive a score of 100 out of 100 accommodation choices in the announcement of the government incentive

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மாணவகளுக்கான அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிற்காகவும் தலா 1000 ரூபாய் வீதம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிட சட்ட பேரவையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு பள்ளி விடுதிகளில் தங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத் தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் அரசின் ஊக்கத்தொகையான ரூ.1000-த்தை பெற்று பயனடையலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!