The girl has a boarding school for children in the teacher work perali village in perambalur district

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) அருண்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பேரளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் பணிபுரிய தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோ குறைந்தபட்சம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்று கல்வியியலில் குறைந்தபட்சம் இளங்கலைப்பட்டமும் பெற்று இருக்கவேண்டும். மேலும், தலைமை ஆசிரியையாக பணிபுரியும் ஆசிரியை விடுதிகாப்பாளர் பொறுப்பினை ஏற்பதோடு அவர் அப்பள்ளியில் மாணவிகளுடன் தங்கி இருக்கவேண்டும். அவருக்கான மாத ஊதியம் ரூ. 25,000 வழங்கப்படும். மற்ற பாட ஆசிரியைகளுக்கு மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும். அனுபவம் உள்ள ஆசிரியைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பத்துடன் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் இதர சான்று நகல்கள் இணைத்து, 18.09.2017 மாலை 5.30 மணிக்குள், நிர்வாக இயக்குநர், பயிர் அறக்கட்டளை, தேனூர் (அஞ்சல்), து.களத்தூர் (வழி), ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் த.பெ.எண் : 621114 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலும் தகவல்களுக்கு 9626695216, 9786964249 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!