The pumpkin in the hands of the drought: In Perambalur county farmers happy

pumpkin-field-perambalur வறட்சி மாவட்டமான பெரம்பலூரில், தண்ணீர் பாசனம் வசதி இல்லாத தரிசு நிலங்களில், வனவிலங்குகளின் சேதத்தை தடுக்கும் விதமாக பூசணிக்காய் சாகுபடி செய்து விவசாயிகள் மானவாரி சாகுபடியில் இரு போகம் பயிர் செய்து கூடுதல் லாபம் பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தரிசு, களர், களிமண் நிலங்களே அதிக அளவில் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்திற்கு நீராதாரம் என்றால் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து வைத்து பாசனம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் குறைந்த பரப்பளவே ஆற்றுப்பாசனத்தை நம்பி உள்ளது. மேலும், பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது.

இந்நிலையில் மக்காச்சோளம், பருத்தி, சோளம், தானிய வகைகள், ஆமணக்கு போன்றவற்றை சாகுபடி செய்த விவவாயிகள், குரங்குள், மான், மயில் போன்றவற்றால் மகசூலில் பெரும் பகுதியை இழக்க நேரிடுகிறது. மனித உழைப்பும் அதிக அளவிற்கு தேவைப்படுகிறது. வனவிலங்குகளின் சேதத்தை தடுக்க மாற்றுப் பயிராக காப்பு காடுகள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாசனம் செய்யாமல் பருவமழையை மட்டும் நம்பியே உள்ள சிறு, குறு விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி, ஆமணக்கு, தானிய பயிர்களை சாகுபடி செய்தால் ஆண்டுக்கு ஒரு பயிர் மட்டுமே விளைச்சலை பெற முடியும். அது எதிர்பாராமல் இயற்கையால் வஞ்சிக்கப்பட்டால், அந்த ஆண்டு முழுவதும் தொடர் நட்டத்தை சந்திக்க நேடும். ஆனால், மாற்றுப் பயிரான பூசணியை சாகுபடி செய்யும் போது கார்காலமான ஆறு மாதத்திற்குள் இரண்டு பயிர்களை செய்து சாகுபடி மகசூலை பெற்று லாபம் பெற முடியும் என தெரிவிக்கின்றனர்.

ஆடி பட்டத்தில் பயிராக்கப்டும் பூசணி கார்த்திகை மாதத்தில் அதாவது பயிரிட்ட 85 நாட்களுக்குள் அறுவடை செய்து விட்டு, உடனடியாக கொத்தமல்லி சாகுபடி செய்யலாம். அவ்வாறு செய்யும் போது வறட்சியை தாங்கி வரும் கொத்தமல்லி பயிரை, விவாசயிகளின் தேவைக்கேற்ப கொத்தமல்லி தழைகளாகவோ, கொத்த மல்லியயாக அறுவடை செய்து பயனடைய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூசணி சாகுபடி செய்யும் போது வனவிலங்குகளான குரங்குள், காட்டுப் பன்றிகள், மான், மயில் போன்றவை உண்ணாது என்பதால் விளைச்சலில் சேதம் என்பது அதிகம் இருக்காது. மேலும், ஏக்கர் ஒன்றுக்கு பூசணி சாகுபடி செய்ய சுமார் 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும், நல்ல பராமரிப்பில் சுமார் 15 டன்னிற்கு குறையாத மகசூலை பெற முடியும். அதில் ஏக்கர் ஒன்றுக்கு சந்தை விலை சாதகமானால், ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட முடியும் என்றும் தெரிவிக்கும் விவசாயிகள், அதே வயலில் கார்த்திகையில் பெய்யும் மழையை வைத்தே கொத்தமல்லி விதைப்பில் மீண்டும் நல்ல லாபத்தை அடைய முடியம் என தெரிவிக்கின்றனர்.

பூசணிக்காயின் தேவை என்பது, சமையலுக்கு மட்டுமில்லால், பல்வேறு மருத்துவ குணமும் கொண்டது. கண் திருஷ்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவதுடன். அமாவாசை போன்ற நாட்களிலும் சமைத்தும் உண்பர். அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணிக்காய் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

குறைந்த செலவில், அதிக லாபம் கிடைப்பதால் இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு மாற்றுப்பயிராக குன்னம், வேப்பூர், அந்தூர், அசூர், ஒதியம், பேரளி, மருவத்தூர் போன்ற கிராமங்களிங்களை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பூசணி சாகுடியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை பூசணிக்காய்களை வியபாரிகளே நேரிடையாக வயலிலே வந்து போட்டு போட்டுக் கொண்டு வயலிலேயே கொள்முதல் செய்வதால் அறுவடைக்கு பின் விவசாயிகள் விற்பனைக்காக அலையும் நேரமும் மிச்சமாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!