The textile department director examined the place where the textile Park is located at Padalur in Perambalur District

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர;கள் மாநாட்டில், அப்போதைய தமிழக முதலமைச்சர; அம்மா அவர;கள் பெரம்பலூர; மாவட்டத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளிப் பு+ங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார;கள். அதனை தொடர;ந்து ஜவுளி பு+ங்கா அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன.

இதற்கென்று ஆலத்தூர; வட்டத்திற்குப்பட்ட பாடாலூர; மற்றும் இரூர; கிராமங்களில் சுமார; 100 ஏக்கர; நிலம் தேர;வு செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திடம் (SIPCOT) ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் ஜவுளிப்பூங்கா அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் சி.முனியநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தொழில் முனைவோர்களிடம் ஜவுளிப்பூங்கா குறித்து ஆலோசனை செய்த இயக்குநர், பாடாலூரில் அமைக்கப்பட்டுள்ள பொது பயன்பாட்டு மையத்தில் இயங்கிவரும் தனியார் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவத்தை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உடன் ஜவுளிப்பூகா பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை கூடுதல் இயக்குநர் கர்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன பொது மேலாளர் மதுமதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் திருவாசகர், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுடமி, துணை இயக்குநர் (சுரங்கத்துறை) சரவணன், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஷாஜகான் மற்றும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!