Venture near Perambalur: Mask thieves who robbed jewelry, car at knife point!

பெரம்பலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் தாலிசங்கிலி, காரை கடத்தி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (52), இவர் பெரம்பலூர் – துறையூர் சாலையில், உள்ள டாஸ்மாக் கடை அருகே தனது சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது மனைவி ராஜலட்சுமி (49), மகள் ரம்யா (32), மகன் விக்னேஷ் (27) ஆகியோர் உள்ளனர். ரம்யாவுக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி சரவணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் பெற்றோருடனே தங்கிக்கொண்டு பெரம்பலூர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதி (9) ஒரு மகள் உள்ளார். நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மகன் விக்னேஷ் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு 10 மணிக்கு வழக்கம்போல் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வாதி பாண்டியனும், அவரது மனைவி, மகள், மற்றும் பேர குழந்தை ஆகியோர் வீட்டின் மெத்தையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மெத்தைக்கு செல்லும் படிக்கட்டு வீட்டிற்குள்ளேயே உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் சுமார் 2:30 மணி அளவில் 5 மர்ம நபர்கள், வீட்டின் கதவை எட்டி வைத்து உள் தாழ்ப்பாளை உடைத்து கீழ் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மேற்படி வாதியை மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த இரும்பு ராடால், முதுகில் தாக்கினர். பின்னர், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்த சமயத்தில், சத்தம் கேட்டு மேலே தூங்கிக்கொண்டிருந்த ரம்யா கீழே வர அவரிடமிருந்து தாலி செயின், வீட்டிலிருந்த செல்போன்கள் மற்றும் கார் சாவியை மிரட்டி எடுத்துக் கொண்டனர். கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தப்பி சென்றனர்.

மாடியில் ரம்யா படுக்கையில் வைத்திருந்த அவரது செல்போன் மூலம் 100 க்கு கால் செய்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், நடத்திய விசாரணையில், 3 பவுன் தாலி செயின், ஒன்றரை பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்கள் என மொத்தம் நான்கரை பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் ஒன்றையும் கடத்தி சென்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மோப்பநாய், மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு, முகமூடி கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் தாலிசெயினை பறித்ததில் பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதோடு, அந்த பகுதி தற்போது கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த பகுதியில் இருந்து கொள்ளையர்கள் எளிதாக தப்பிக்க, முக்கிய சாலையை சென்றடைய மலைத்தொடர் வழிகள் உள்ளதால், கொள்ளையர்கள் அப்பகுதியை தேர்ந்தெடுத்து கொள்ளையடித்து வருகின்றனர் என்பது குறிப்பிட்தக்கது.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெரம்பலூர் நகரப் பகுதிக்கு கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை வழங்குவதோடு, அம்மாபாளையத்தில் கிடப்பில் உள்ள புதிய காவல் நிலைய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சிசிடிவி கேமரா : 

https://www.amazon.in/s?k=cctv+camera+for+home&i=kitchen&crid=3GKYBLSRVSC4A&sprefix=ccctv%2Ckitchen%2C420&linkCode=ll2&tag=rigas-21&linkId=8fd4f5f163310b6f514e42c40fa14196&language=en_IN&ref_=as_li_ss_tl

 

https://www.amazon.in/s?k=ac&i=kitchen&crid=2DZVVW6JW7II2&sprefix=%2Ckitchen%2C1495&linkCode=ll2&tag=rigas-21&linkId=d856e3f7c638d29d9aed22195450765a&language=en_IN&ref_=as_li_ss_tl

 

 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Check the Latest News Headlines and Updates in Tamil Featuring Politics, business, - Kalaimalar.

error: Content is protected !!