Village people protesting against the opening of waste water in the river : Ration Card handed over to residents of Perambalur Collectorate

பெரம்பலூர் அருகே கிராமத்தின் கழிவு நீரை ஆற்றில் கலக்க முயற்சிப்பதை தடுக்க கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இன்று வி.களத்தூர் கிராம மக்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் மொத்த கழிவு நீரையும், அருகே உள்ள வெள்ளாற்றில் கலக்க கிராம ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது எதிர்ப்பு தெரிவிக்கும் ராயபுரம் பகுதி மக்கள், ஆற்றில் வி.களத்தூரின் கழிவு கலந்தால் ராயபுரம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் மாசுபட்டு அழிந்து விடும்.

மேலும், துர்நாற்றம் வீசுவதோடு நோய்கள் உண்டாகும் என்பதால் கழிவு சுத்திகரிப்பதுடன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று தங்கள் ரேசன் கார்டுகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ரேசன் கார்டுகளை ஒப்படைக்க வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தப் பின்னர் கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!