Youth Wing members from DMK camp enrollment at S.Adudurai

பெரம்பலூர் மாவட்டம், சு. ஆடுதுறையில் திமுக இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் (வடக்கு) சார்பில் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் சு.ஆடுதுறை, கழனிவாசல், லப்பைக்குடிக்காடு, ஒகளுர் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கழக உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழாவில் வேப்பூர் ஒன்றிய (வ) செயலாளர் மதியழகன், வேப்பூர் ஒன்றிய (தெ) மருவத்தூர் ராசேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கரிகாலன், ரசூல் அகமது, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!