பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் சைக்கிள் போட்டி

schedule
2017-09-06 | 07:26h
update
2026-07-03 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perarignar Anna’s birth anniversary, the cycling competition in Perambalur

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விடுத்துள்ள மற்றொரு தகவல்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டப் பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 09.09.2017 அன்று காலை 6.30 மணியளவில் மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரவுண்டானாவிலிருந்து பாலக்கரை சென்று மீண்டும் ரவுண்டானா வந்தடைவதற்கான வழித்தடத்தில் நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்களது சொந்த செலவில் மிதிவண்டி கொண்டு வருதல் வேண்டும். மாணவ – மாணவியர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். வீரர் – வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

இச்சைக்கிள் போட்டியில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான வயது வரம்பு 6,7,8ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு 9,10ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

17 வயதிற்குட்டப்ட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு 11,12ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டதற்கான தகுதிச் சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்படும்.

எனவே, சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியர்களை பள்ளி வயது சான்றிதழுடன் 09.09.2017 அன்று காலை 6.00 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:37:53
Privacy-Data & cookie usage: