உள்ளாட்சி மறுவரையறைகளுக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கால கெடு நீடிப்பு : பெரம்பலூர் ஆட்சியர்

schedule
2018-01-06 | 17:44h
update
2026-07-04 | 15:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Period of extortion objections to local body election redevelopments: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள், நகராட்சி வார்டுகள், லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் குரூம்பலூர் பேரூராட்சி வார்டு எல்லை மறுவரையறை கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட இணையதளத்திலும் (Perambalur.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

வார்டு எல்லை மறுவரையறை கருத்துருக்கள் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் கேட்டு 05.01.2018 வரை ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது.

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேலும் கால அவகாசம் வழங்க கேட்டதன் பேரில், வார்டு எல்லை மறுவரையறை கருத்துருக்கள் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை வார்டு எல்லை மறுவரையறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.01.2018 அன்று மாலை 5.45 மணி வரை அளிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 15:07:02
Privacy-Data & cookie usage: