பெரம்பலூரில் பெரியார் சிலை சேதம்; நடவடிக்கை கோரி அதிமுகவினர் சாலை மறியல்!

schedule
2023-10-02 | 18:29h
update
2023-10-02 | 18:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Periyar statue damaged in Perambalur; ADMK road blockade demanding action!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையின் கை விரலை சேதப்படுத்தி, சிகப்பு சால்வையை அணிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன்ர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement

அதிமுக வினர் 1996 ஆம்ஆண்டு தலைவர்களான பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளை வைத்துள்ளனர். அவ்விடத்தில் 2017ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலையை வைத்துள்ளனர்.

நேற்றிரவு மேற்படி இடத்திலிருந்த பெரியார் சிலையின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தபட்டு பீடத்தில் கிடந்துள்ளது இன்று மாலை தெரியவந்தது. சேதமான பெரியார் சிலையின் பெருவிரலை அதிமுகவினர் ஒட்டி சரி செய்தனர்.

பெரியார் சிலை மீது சிவப்புதுணி போடபட்ட புகைபடம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. போலீசார் அப்பகுதியில் இருக்கும், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 07:10:00
Privacy-Data & cookie usage: