உதவி உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் !

schedule
2022-06-04 | 09:39h
update
2022-06-05 | 12:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Persons with disabilities can apply for assistance equipment: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தகுதி உடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள் கீழ்கண்ட உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணைப்புசக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் மற்றும் தசைசிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய செயலிகளுடன் கூடிய கைபேசிகள், கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மற்றும் நவீன, செயற்கை கால்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கு ஊன்றுகோல்கள் இகைகடிகாரங்கள் மற்றும் நவீன மடக்கு ஊன்றுகோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

Advertisement

எனவே, தகுதியுடையேர்கள், தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அதிக விவரங்களுக்கு 04328 – 225474 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 14:19:50
Privacy-Data & cookie usage: