உயிருக்கு பாதுகாப்பு கோரி கணவன் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

schedule
2017-02-13 | 13:18h
update
2026-06-27 | 05:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Petition seeking protection for their lives as husband and wife to the district collector

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் மனைவி பெரியம்மாள் (வயது 37) என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவல குறைத் தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு விவரம்:

மேட்டுப்பாளையம் கிராமத்ததில் பெரியம்மாளின் கணவர் மகாராஜனின் தந்தை தங்கவேலுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்கவேல் தனது சொத்தை மூன்று மகன்களுக்கு முறையாக பிரித்து கொடுக்காமல் முதல் மகனான காசிராஜனுக்கு 4 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டதாகவும், 1 ஏக்கர் நிலத்தை பெற பெரியம்மாளின் கணவர் மகாராஜன் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.2 ம் தேதி இந்த முன்விரோதம் காரணமாக தங்கவேல் மருமகளான பெரியம்மாளை தகாத வார்த்தைகாளல் திட்டியும், தாக்கியும், செல்போனையும் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காயம்மடைந்த பெரியம்மாள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதால், மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் முறையிட்டதன் பேரில் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு பதிந்த போலீசார் எதிர் தரப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எதிர்தரப்பினர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுவதாகவும், சொந்த ஊருக்கு செல்லாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து தங்கி வருவதாகவும், கணவன் மனைவி இருவருக்கும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியம்மாள் மனு கொடுத்தார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 05:23:21
Privacy-Data & cookie usage: