மகன், மருமகனிடம் இருந்து தன்னையும் சொத்துக்களையும் காக்க கோரி பெண் கலெக்டருக்கு மனு!

schedule
2021-04-13 | 16:56h
update
2021-04-13 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Petition to female collector seeking protection of herself and property from son, nephew!

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபொன்னு (வயது 61), என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

எனக்கு ராசத்தி, யோகவதி என்ற 2 பெண் பிள்ளைகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனது கணவர் மருதை இறந்து கடந்த 5-ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, . நான் எனது வீட்டில் தனியாக சமைத்து கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றேன். எனது கணவர் எனக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் உள்ளது. இதை எனது மகன் அவனது மனைவி உமா மீது எழுதி வைக்க கோரி பல வகைகளில் துன்புறுத்தி வருகிறார். கடந்த 20 ம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரிலும், ஊர் முக்கியஸ்தர்களும் அறிவுரை கூறி அனுப்பினர். ஆனால், மீண்டும் என் மீது ஆத்திரம் கொண்டு, கொலை செய்யும் நோக்கில் அரிவாள் காட்டி மிரட்டி வருகிறார். எனவே, எனக்கும், எனது உடைமைகள், சொத்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 22:51:19
Privacy-Data & cookie usage: