Photo exhibition to showcase the achievements of the Government of Tamil Nadu in Perambalur!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அறியும் வகையில், கிராமங்களில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர், எம்.எல்.ஏக்கள்., கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்பு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் சிறு புகைப் படக் கண்காட்சிகளாக நடத்தப்பட்டு வருகின்றது. அதே போல், தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி, நடத்தப்பட்டது. இதை, நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். அவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.