Photo exhibition to showcase the achievements of the Government of Tamil Nadu on behalf of the Department of News and Public Relation at Ezhumur near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.

தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அரசு விழாக்கள், நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்த தொகுப்பாக புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இதே போன்று, புகைப்படக் கண்காட்சி வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இதனை இக்கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து பயனடைந்தனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது, இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் உள்ளிட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!