Pigeon in Ramanathapuram tournaments: 13th annual award ceremony!

ராமநாதபுரம் புறா சங்கம் சார்பில் புறாவுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாஜ் மினிமஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு இராமநாதபுரம் ஏவிஎம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெயக்குமார், மாஸ் நிறுவனர் சீனிஇபுறாம்ஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ராமநாதபுரம் புறா சங்க நிர்வாகிகள் தலைவர் பாலா, செயலாளர் ரூபஸ், பொருளாளர் ராஜேஸ்வரன்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கராத்தே ஈஸ்வரன், டாக்டர் பழனியப்பன், ஆகியோர் கலந்து கொண்டு பந்தயம் குறித்து சிறப்புரையாற்றினர்.

முன்னதாக பந்தயம் ராமநாதபுரம் புறா சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தஞ்சாவூர் – ராமநாதபுரம் (150கி.மீ) இடையே நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடத்தையும் சரவணக்குமார் புறா பெற்றது.

இரண்டாம் கட்டமாக விழுப்புரம்- ராமநாதபுரம் (290கி.மீ)இடையே நடைபெற்ற போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் பரிசை சரவணக்குமார் புறாவும் இரண்டாம் பரிசை ரூபஸ் புறாவும் பெற்றது.

மூன்றாம் கட்டமாக தாம்பரம் – ராமநாதபுரம் (415கி.மீ) இடையே நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை சரவணக்குமார் புறாவும், இரண்டாம் பரிசை முகம்மது ரைசுதீன் புறாவும், மூன்றாம் பரிசை சிவாஜிகணேசன் புறாவும் பெற்றது.

நான்காம் கட்டமாக ஆந்திரா மாநிலம் நா யுடு பேட்டை – ராமநாதபுரம் இடையே நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் சிவாஜிகணேசன் புறா பெற்றது.

ஐந்தாம் கட்டமாக மெடாரமெட்ரா – ராமநாதபுரம் (720 கி.மீ)பந்தயத்தில் முதல் பரிசு சரவணக்குமார் புறாவும் இரண்டாம் பரிசு சிவாஜிகணேசன் புறாவும் பெற்றது.

பந்தயத்திற்கான சாம்பியன் கோப்பையை சரவணக்குமார் புறா பெற்றது. விழா நிறைவில் சங்க பொருளாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

– சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!