Playing a ball in the Thanjavur Collector’s office is not a problem because the water does not come downstairs.

தஞ்சாவூர் மேட்டூர் அணை திறந்து 50 நாட்களுக்கு மேலாகியும் கடைமடைப்பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குறைந்த அளவே தண்ணீர் வந்த நிலையில் தற்சமயம் 3 நாட்களாக தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களின் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் நாளில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் இறகுபந்து ஆடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில் தண்ணீர் வராததால் விவசாய நிலங்கள் விளையாட்டு மைதானமாக மாறி வருகிறது. முதல்வர் டென்னிஸ் விளையாடி வருகிறார். அவரை கண்டிக்கும் விதத்தில் நாங்கள் விளையாடினோம்.

மேலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க கூறி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து அறிவித்தும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்கள் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் உடன் கடன் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள் கண்ணப்பன் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!