கரோனா தொற்று சிகிச்சை சிறப்பு வார்டை மேம்படுத்த பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ரூ.50 லட்சம் வழங்கினார். 

schedule
2020-03-28 | 21:05h
update
2020-03-28 | 21:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
plea to improve the treatment of infectious Tamilselvan MLA special word Corona gave Rs 50 lakh.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்க துவங்கப்பட்டுள்ள சிறப்பு வார்டை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதியை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

கொரோனோ வைரஸ் தொற்றினால் உலகநாடுகள் உச்சகட்ட பீதியில் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவும், தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனோவை ஒழிக்க, தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். பொதுமக்களும் தங்கள் சக்திக்கு ஏற்ப நிதி உதவியினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள கொரோனோ சிறப்பு வார்டை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், சட்டமன்ற சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார். இதனை பெரம்பலூர் மாவட்ட அலுவலர் தெய்வநாயகியிடம் வழங்கிய தமிழ்ச்செல்வன் பொது மக்களுக்கு உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 06:08:54
Privacy-Data & cookie usage: