பெரம்பலூர் அருகே 2 கடைகளில் திருட்டு : கோவிலில் கொள்ளை முயற்சி!

schedule
2018-01-05 | 13:00h
update
2018-01-05 | 13:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Plea to theft in 2 stores, near in perambalur : Try to loot the temple!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு கோயிலில் வெளிகேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோயில் கர்ப்பகிரகத்தின் கதவுகளை செங்கல் கற்களை கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் சென்று விட்டனர்.

Advertisement

இதே போல் வாலிகண்டபுரம் கடைவீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் சுரேஷ் (35). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை முடிவிட்டு சென்று விட்டார்.

இன்று காலையில் கடை திறப்பதற்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த சுரேஷ் அதிர்ச்சியடைந்து கடையை திறந்து பார்த்த போது கடையில் இருந்து 25000 ருபாய் ரொக்க பணம் திருடிபோயிருந்தது.

இதே போல் வாலிகண்டபுரம் மெயின் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கடை வைத்திருப்பவர் தேவராஜ் (45) இவர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இவர் கடையை திறந்து பார்த்த போது கடையில் இருந்து 1000 ருபாய் பணம் திருடு போய் இருந்தது.

இதுகுறித்து சுரேஷ், தேவா இருவரும் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மங்களமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒரே இரவில் இரண்டு கடைகளில் திருட்டும், கோயிலில் திருட முயற்சி நடைபெற்ற உள்ளதால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 15:14:05
Privacy-Data & cookie usage: