நாளை +2 தேர்வு முடிவுகள் : இணையதளத்தில் காணலாம் : முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

schedule
2017-05-11 | 10:45h
update
2026-06-27 | 05:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மேல்நிலைப் பொதுத் தேர்வு மார்ச் 2017 தேர்வு முடிவுகளை இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் – 15.5.2017 வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் – முதன்மைக்கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 12.05.2017 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வாகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளைwww.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளின் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித் தேர்வாகளுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

Advertisement

மேலும் 15.05.2017 முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

17.05.2017 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற – தேர்வெழுதிய பள்ளி மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தோ;வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 12.05.2017 முதல் 15.05.2017 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க்க கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்- மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்.

பகுதி-1 மொழி ரூ. 550- பகுதி-2 மொழி (ஆங்கிலம்) ரூ.550- ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும ரூ.275- மறுகூட்டல் கட்டணம் பகுதி-1 மொழி. பகுதி -2 (ஆங்கிலம்) ரூ.305- மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் (இரு தாட்கள் சேர்த்து) ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205- செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒப்புகைச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் திருத்திய விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணைய தள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

மார்ச் 2017-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜீன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்ககு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 05:51:41
Privacy-Data & cookie usage: