பி.எம் கிசான் தவணை தொகை : விவசாயிகள் தொடர்ந்து பெற ஆதார் விவரங்களை சரிபார்க்க, பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2022-08-17 | 22:10h
update
2026-06-04 | 17:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

PM Kisan Installment Amount : Perambalur Collector Information to Check Aadhaar Details for Farmers to Continue

பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 74,964 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இது வரை 11 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12-வது தவணை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் தவணைகளை பயனாளிகள் தொடர்ந்து பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். இந்த இ-கேஒய்சி விவரங்களை சரிபார்க்க பயனாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள கிராம பொது சேவை மையங்களை அணுகி தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அல்லது பயோமெட்ரிக் முறையில் தங்களது தகவல்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

இதுநாள் வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டப்பயனாளிகளில் 42,107 பயனாளிகள் மட்டுமே தங்களது ஆதார் விவரங்களை சமர்பித்துள்ளனர். மீதமுள்ள 32,587 பயனாளிகள் உடனடியாக இ-கேஒய்சி விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இ-கேஒய்சி விவரங்களை சமர்ப்பித்த பயனாளிகளுக்கு மட்டுமே வருங்காலங்களில் பி.எம். கிசான் திட்ட பலன் தொடர்ந்து வழங்கப்படும் என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 17:45:11
Privacy-Data & cookie usage: