பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சந்திப்பு!

schedule
2019-12-18 | 16:41h
update
2019-12-18 | 16:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Prime Minister Narendra Modi’s brother meets with PMK founder Ramdoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான பிரகலாத் மோடி இன்று மாலை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Advertisement

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அவரை ராமதாசும்,, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தனர். தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக மருத்துவர் ராமதாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, பிரகலாத் மோடி நினைவு கூர்ந்ததாகவும்,

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றையும் பிரகலாத் மோடி ராமதாசிற்கு வழங்கிய அவர் இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.03.2026 - 15:53:21
Privacy-Data & cookie usage: