வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த பாமக முடிவு

schedule
2021-06-29 | 05:17h
update
2021-06-29 | 05:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

PMK decides to hold a demonstration in Perambalur condemning the Block Development Officer

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் பாமக கட்சியை தரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது எடுத்த வலியுறுத்தி 2ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பாமக முடிவு செய்துள்ளது.

பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான பாமகவினர் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் எஸ்பி மணி ஆகியோரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பென்னக்கோணம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பென்னக்கோணம் துணைத் தலைவர் செல்வராணியின் கணவர் செல்வகுமாரை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்லகுமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, அவர்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையை பேசாமல் பாமக கட்சியையும், கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஷ் மற்றும் வன்னியர் சமுதாயத்தையும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்கான ஆடியோ பதிவுடன் கடந்த 22ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்லக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார். பாமக கட்சியை தரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்லக்குமார் மீது துறைரீதியாவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 2ம்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:19:36
Privacy-Data & cookie usage: