பெரம்பலூர் அருகே பாமக பிரமுகர் அடித்து கொலை: 2 பேர் கைது, தலைமறைவான ஒருவருக்கு வலைவீச்சு!

schedule
2023-11-08 | 16:11h
update
2023-11-08 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

PMK personage beaten to death near Perambalur: 2 arrested, one absconding arrested!

பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில், 4 ரோட்டில் இருந்து கவுல்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான ஒரு தகர கொட்டகையில், அதே பகுதியில் மலை அடிவரத்தில் வசிக்கும் கலை நகரைச் சேர்ந்த
ராஜூ-நீலா தம்பதியினரின் இரண்டாவது மகன் சுபாஷ்(24), என்ற வாலிபர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுபாஷை
முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சுபாஷ் பாமக பிரமுகர் என்பதும், கொட்டகையை கொளுத்தியது, இருசக்கர வாகனத்தை கிணற்றில் வீசியது என இரண்டுக்கும் மேற்ப்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

பெரம்பலூர் பாலாம்பாடி மேல தெருவை சேர்ந்த சத்தியசீலன் மகன் குமார் (22) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சுபாசுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டைக்கு சென்றுள்ளனர். சுபாஷ், குமாரை விட்டு விட்டு சென்றதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு குமாரின் இருசக்கர வாகனத்தை சுபாஷ் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இதுகுறித்து மருவத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதில் இருதரப்பினரும் சமாதானமாக சென்று உள்ளனர்.

விளம்பரம்:

இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இக்காரணத்தினால் இருவரும் நேராக சந்தித்துக் கொள்ளும் போது ஒருவரை ஒருவர் பிரச்சனை செய்து வந்த நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் மதுபோதையில் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டனர். அப்போது சுபாஷ் குமாரை அசிங்கமாக பேசி, முகத்தில் காரி துப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குமார் தொலைபேசி மூலம் தன் நண்பர்களான அருமடலை சேர்ந்த கிரீஸ்குமார் (22) மற்றும் சரத் (36) ஆகியோரை வரவழைத்து சுபாஷை கை மற்றும் காலால் அடித்து விட்டு 9.30 மணியளவில் அங்கிருந்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் தலைமறைவாக உள்ள சரத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதத்தால் கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 17:48:36
Privacy-Data & cookie usage: