பெரம்பலூர் அருகே விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி! மருத்துவ மனையில் அனுமதி!!

schedule
2022-05-05 | 17:03h
update
2022-05-05 | 17:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Poisoned Illigal Affair couple near Perambalur! Admitted to hospital !!

பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் அருகே உள்ள வெள்ளனூரை சேர்ந்த பழனியாண்டி மகன் அண்ணாதுரை (36), இவரது மனைவி கனகா (29), அண்ணாதுரை தனது மனைவி கடந்த ஏப்.3ந் தேதி காணவில்லை எனவும் கண்டுபிடித்து தரக்கோரியும் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதே வேளையில், அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டனும் (25). காணவில்லை.

Advertisement

இந்நிலையில், கள்ளக்காதலில் ஈடுபட்ட மணிகண்டன், கனகா இருவரும் , வீட்டை வெளி ஊர் சுற்றியதும், போலீசார் தேடி வருவதை அறிந்த அவர்கள் இன்று காலை சுமார் 8 மணி அளவில் மருவத்தூர் அருகே உள்ள அருமடல் பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளனர். இது குறித்து அவர்களே 108 ஆம்புலன்சுக்கும் போன் செய்து தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கள்ளக்காதலர்கள் இருவரையும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 15:47:45
Privacy-Data & cookie usage: