கஞ்சா பொருட்களை விற்றவரை கைது செய்த போலீசார்!

schedule
2021-08-25 | 15:57h
update
2021-08-25 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police arrest cannabis seller near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், மங்களமேடு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, லப்பைக்குடிக்காடு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த நபரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அந்த நபரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், லப்பைக்குடிக்காடு, ஜமாலியா நகரை சேர்ந்த, உமர்பாரூக் மகன் அஹமது (22) என்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.05.2026 - 14:33:51
Privacy-Data & cookie usage: