பெரம்பலூர் அருகே வீட்டில் கொள்ளையடித்த கும்பலை கைது செய்த போலீசார்: ஒருவன் தப்பினான்!

schedule
2022-05-15 | 16:47h
update
2022-05-15 | 16:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police arrest gang who looted house near Perambalur: One escapes!

தப்பித்த திருடன் பிரசாத்

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ரம்யா என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் மற்றும் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மே.08 அன்று இரவு 2.30 மணிக்கு பாண்டியன் என்பவருடைய வீட்டில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல், குரங்கு குல்லா அணிந்து வந்து, 3 பவுன் தாலி செயின் மற்றும் ¾ பவுன் மோதிரம், ஒரு 8 லட்சம் மதிப்புள்ள காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். புகாரின் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். காரின் வழித்தடங்களை சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஆய்வு செய்ததில், அந்த காரானது சென்னையில் உள்ள ஆர்.கே நகரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

Advertisement

இந்தக் கூட்டுக் கொள்ளையில் திருடர்கள் சிவகங்கை மாவட்டம், வேளாங்குளத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் சூர்யா அது ஊரைச் சேர்ந்த கோலைமுத்து மகன் ரஞ்சித் (25), மதுரை மாவட்டம், வரிச்சூர் அருகே உள்ள உரங்கன்பட்டியை போஸ் மகன் அழகர்பாண்டியன் (32), சென்னை, பெருங்குடி, அம்பேத்கார் புரட்சி நகர், திருவள்ளுவர் தெரு, துரைராஜ் மகன் பிரசாத் (26), பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு சமத்துவப்புரத்தை சேர்ந்த தாழைகருப்புதேவர் மகன் சுப்ரமணியன் (48), ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, கார் மற்றும் 3 பவுன் தாலி செயின் மற்றும் ¾ பவுன் மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

5 திருடர்களையும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ சோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவின் அருகே செல்லும்போது, பிரசாந்த் என்பவன் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றான். மற்ற 4பேரை போலீசார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய திருடன் பிரசாத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

கொள்ளையர்களை பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் சன்மானம் வழங்கி பாராட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:10:18
Privacy-Data & cookie usage: