பெரம்பலூர் அருகே 3.5 லட்சம் மதிப்பிலான 2 கான்கிரீட் கலவை இயந்திரங்களை திருடிய 3 பேர் கைது

schedule
2018-11-13 | 07:25h
update
2026-04-09 | 11:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police arrested 3 persons stolen 2 concrete mixer machines worth Rs 3.5 lakh near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் – இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மகன் வினோத்பாபு (வயது 32), கட்டிட ஒப்பந்ததாரான இவர், பெரம்பலூர் நான்கு ரோடு, மின் நகர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு பணிகள் நிறுத்தப்பட்டதால், 2.5 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் கலவை இயந்திரத்தையும், வாடகைக்கு பெரம்பலூரில் ஷாஜகான் என்பவரிடமிருந்து எடுத்து வந்த 1.5 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் கலவை இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு சென்றிருந்தார்.

Advertisement

ஆனால், தீபாவளி மறுநாள் காணாமல் போனது. இதுகுறித்து வினோத்பாபு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர் .

போலீசாரின் விசாரணையில் கான்கிரீட் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 கலவை இயந்திரங்களை, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முள்ளுவாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(22), திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள தம்மம்பட்டியை சேர்ந்த வினோத்(25), ராஜா(33), ஆகியோர் திருடியதும், அதை, தம்மம்பட்டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் விற்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து 2 கலவை இயந்திரங்களை பறிமுதல் செய்த போலீசார், வினோத், ராஜா, மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:36:54
Privacy-Data & cookie usage: