பெரம்பலூர் அருகே குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 8.5 பவுன் தாலிசெயின் பறித்த 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

schedule
2020-12-10 | 07:01h
update
2026-06-17 | 17:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police crack down on 3 mysterious individuals who snatched 8.5 pounds of thali Chain from a woman who came to dump garbage near Perambalur!

கற்பனை காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி மைதிலி (வயது 24). இன்று காலை எழுந்த அவர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்த குப்பைகளை கொட்டுவதற்காக, சாலையில் உள்ள குப்பைத் தொட்டிக்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள், மின்னல்வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து, மைதிலியின் கழுத்தில் இருந்த 8.5 பவுன் தங்க தாலி செயினை பறித்தனர். அப்போது அவர்களுடன் போராடி கூக்குரலிட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் மாயமாய் மறைந்து சென்றனர். இது குறித்து மைதிலி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கை.களத்தூர் போலீசார் அங்க, அடையாளங்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதன் மதிப்பு செய்கூலி சேதாரத்துடன் சுமார் ரூ. 3.5 லட்சம் இருக்கும். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை அடையாளம் காண தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:48:35
Privacy-Data & cookie usage: