பெரம்பலூர் அருகே கர்ப்பிணி மானை தீயிட்டு கரிக்கியாக்கியவர்களை போலீஸ், வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை!

schedule
2021-03-07 | 01:49h
update
2021-03-07 | 01:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police, Forest Department conduct intensive search for those who set fire to a pregnant deer near Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ளது அரணாரை கிராமம். அங்கிருங்து ரெங்கநாதபுரம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காலிமனைப்பகுதி உள்ளது. அங்கு நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கர்ப்பிணி மானை வெட்டி அதனை தீயிட்டு கரியாக்கி விட்டு இருப்பதாக கிடைத்த தகலின் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்மபவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் மான் மக்காச்சோள கட்டைகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டு பாதி வெந்தும் வேகாமல் இருந்த மீதியை கைப்பற்றிய அவர்கள் நடத்தி தொடர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார், மற்றும் வனத்துறையினர், நடத்திய விசாரணையில் கர்ப்பபிணி மான் தண்ணீர் தேடி வயல்வெளிக்கு வந்திருக்கலாம். தண்ணீருக்காக அங்கிருந்த வயலுக்கு சென்ற போது அங்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்திருக்காலம், அதனை மறைப்பதற்காவோ அல்லது, வேட்டையாடிய நிலையில் கர்ப்பிணி மான் என்பதால் கொண்டு வந்து எரித்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதுடன் அக்கம்பக்கம் உள்ள விவசாயிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மான் குட்டியுடன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதி வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 08:14:00
Privacy-Data & cookie usage: