பெரம்பலூர் அருகே இன்று நடந்த மூதாட்டி கொலை வழக்கில், பேரன் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் !

schedule
2021-09-20 | 18:41h
update
2021-09-20 | 18:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police have arrested 2 people, including a grandson, in connection with the murder of an old woman near Perambalur today.

பெரம்பலூர் புறநகரான விளாமுத்தூர் ஏ.சி.ஆர் நகரில் இன்று காலை பச்சையம்மாள் (90) என்கிற மூதாட்டி கொலை செய்த வழக்கில் அவரது பேரன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சையம்மாளின் உறவினர்கள் மற்றும், அக்கம்பக்கத்தாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் மகன் வழி பேரன் கோகுலிடம் விசாரணை நடந்த போது முன்னுக்கு பின்னான தகவல் தெரிவித்ததோடு, பதட்டத்துடன் இருந்ததை வைத்து போலீசார் அவரை தீர விசாரித்தில் கோகுலும், அய்யலூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கலையரசனும் (23) பாட்டியை நள்ளிரவில் கொன்றாக ஒப்புக் கொண்டனர். பாட்டி வீட்டில் உள்ளவர்களிடம் வம்பு இழுத்து வந்ததோடு, அவரது தங்கையும், அவரது அம்மாவையும் திட்டி வந்துள்ளார். ஏற்னவே தந்தை சங்கர் இறந்து விட்ட நிலையில், பாட்டியின் பேச்சு வேதனை அடைய செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றதாக தெரிவித்தார். 2 பேரையும் கைது செய்த போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:48:19
Privacy-Data & cookie usage: