பெரம்பலூர் அருகே மளிகை கடையில் குட்கா சோதனைக்கு சென்ற போது, வெடி பொருளான டெட்டனேட்டரை கைப்பற்றிய போலீசார்!

schedule
2022-08-09 | 15:03h
update
2022-08-09 | 15:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police seized a detonator when Gutka was raided at a grocery store near Perambalur.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (47). மளிகை நடத்தி வருகிறார். இன்று காலை குட்கா சிறப்பு படையை சேர்ந்த, தலைமைக் காவலர் வெங்கடேசன், ஞானசேகர், ஆகியோர் கவுல்பாளையம் பகுதியில் திடிரென ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது, மகேந்திரனின் கடையை சோதனையிட்ட போது, குவாரியில் வெடி வைக்க பயன்படுத்தப்படும், 175 டெட்டனேட்டர்களை கடையில் இருந்து கண்டெடுத்தனர்.

Advertisement

விளம்பரம்:

இது குறித்து அவர்கள் விசாரித்த போது, அப்பகுதியில் இயங்கி வரும் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான குவாரியில் மகேந்திரனின் மகன்கள் கோபிநாத் (23), பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில், அதிக சேதம் விளைக்க கூடிய வெடி பொருட்களை வைத்திருந்திருந்ததால், அவற்றை கைப்பற்றினர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியோடு, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

விளம்பரங்கள்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 03:06:37
Privacy-Data & cookie usage: