5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்

schedule
2017-12-29 | 11:54h
update
2026-07-04 | 15:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Polio doping camp for all children under 5

பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்குமான போலியோ சொட்டு மருந்து முகாம் 28.01.18 மற்றும் 11.03.18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

Advertisement

இளம்பிள்ளை வாதநோயை ஒழிக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம்கள் 28.01.18 மற்றும் 11.03.18 ஆகிய தேதிகளில்; காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

பெரம்பலூர; மாவட்டத்தில் இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார; மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 387 மையங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆக மொத்தம் 1,579 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் இந்த முகாமிலும் அந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க நடத்தப்படும் இந்த முகாமினை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 15:37:18
Privacy-Data & cookie usage: