பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து

schedule
2017-04-29 | 17:07h
update
2026-06-27 | 06:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Polio drops on 2nd phase tomorrow in Perambalur district || பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து

பெரம்பலூர் மாவட்டத்தில் 384 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடக்கிறது

இளம்பிள்ளை வாத நோயை, இந்தியாவில் முழுமையாக ஒழிக்க பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி இடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆக மொத்தம் 384 மையங்களில் இந்த முகாம் நடக்க உள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1,528 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்றோர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், நாளை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.

மேலும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் கட்டமாக நாளை நடைபெறவுள்ளது. எனவே பெற்றோர்கள் தவறாது தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டு, இளம்பிள்ளை வாதநோயிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:46:04
Privacy-Data & cookie usage: