பெரம்பலூர் மாவட்டத்தில் 46,631 குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து

schedule
2018-01-28 | 09:35h
update
2026-06-28 | 16:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Polio drops to 46,631 children in Perambalur district today

பெரம்பலூர் மாவட்டத்தில் 46,631 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா துறைமங்கலம் அங்கன்வாடி மையத்தில் இன்று துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக (28.01.18) இன்று 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது. இந்த முகாம்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாh; மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆக மொத்தம் 387 மையங்களில் 46,631 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்க உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் அங்கன்வாடி பணியாளா;கள், சுகாதார பணியாளா;கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆக மொத்தம் 1,602 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிhpயர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள விழிப்புணர்வு பிரசார பணியில் ஈடுபடவேண்டும். இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 11.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 16:03:37
Privacy-Data & cookie usage: