நாளை மாலை 6.00 மணிக்குப்பிறகு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது

தேர்தல் ஆணையம் உத்தரவு

schedule
2016-05-13 | 17:53h
update
2026-06-24 | 06:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார், இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடுசட்டமன்றப்பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 16.05.2016 (திங்கட்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.

14.05.2016 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள்செயலில் இருக்கும்:-

(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோகூடாது.

(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணுவடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3) பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசைநிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.

Advertisement

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 14.05.2016 அன்று மாலை 6.00 மணிக்குமேல் அந்தத் தொகுதியை விட்டுவெளியேற வேண்டும்.

(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரபேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7) வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வருவனவற்றிற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து தனிஅனுமதி பெற உரிமையுடையவராவார். அவைவருமாறு:-

அவரது பயன்பாட்டிற்கான ஒருவாகனம், தேர்தல்முகவரின் பயன்பாட்டிற்கான ஒருவாகனம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சிபணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொரு வாகனம்.

(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய முறைகேடான செயலாகும்.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது, என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 06:03:34
Privacy-Data & cookie usage: