Polling station agents meeting in Trichy! Chief Minister M.K. Stalin participates! Perambalur District Secretary Kunnam C. Rajendran Report!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

2024 -ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட கழகங்களில் உள்ள தொகுதியில் அடங்கியுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் 26.07.2023, புதன்கிழமை, காலை 10.00 மணி முதல், மாலை 4.00 மணி வரை திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து உரிய நேரத்தில் அனைவரையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!