பொங்கல் பண்டிகை : அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் ; மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி

schedule
2020-01-10 | 16:22h
update
2020-01-10 | 16:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pongal Festival: Special buses from all major cities; Managing Director R. Ponmudi

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட். மேலாண் இயக்குநர் விடுத்துள்ள தகவல்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வோளங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 12.01.2020 முதல் 14.01.2020 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு ஜன.12 முதல் 14. வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஜன 12. முதல் 14. வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல ஜன.15. முதல் 20. வரை சிறப்பு பேருந்துகள் இயக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 23:51:21
Privacy-Data & cookie usage: