அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை, நாளை மறுநாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2024-01-12 | 15:06h
update
2024-01-12 | 15:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pongal gift package will be given to all rice family card holders tomorrow and the day after tomorrow; Perambalur Collector Information!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2024 -ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கத்தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

Advertisement

முதற்கட்டமாக வெளியிடப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் உட்பட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் (சர்க்கரை அட்டைதாரர் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் நீங்கலாக) 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள 189816 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 82 குடும்பங்கள் ஆக மொத்தம் 189898 குடும்பங்களுக்கு 282 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 19:32:11
Privacy-Data & cookie usage: