Pongal in ariyaman: adventure games in sea : Minister Manikantan presented the prize.

ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் கடலோர பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.943 லட்ச மதிப்பி் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அரியமான் கடற்கரையில் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் கலைவிழாவில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கடல் நீர் சாகச விளையாட்டு போட்டிகள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:

வளர்ந்துவரும் மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தளமான ராமேஸ்வரத்தினை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தளமாக மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காணும்பொங்கல் திருநாளான இன்று தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயம், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் அரியமான் கடற்கரையில் பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டு போட்டிகள் மற்றும் சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக நீச்சல்போட்டி, கயக், வாட்டர்பீடில், பீச்ல வாலிபால் போன்ற விளையாட்டு போட்டிகளும், சுற்றுலா துறையின் சார்பாக பரதநாட்டியம், சிலம்பம், கரக்காட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், சாட்டை குச்சி, மாடு, மான், மயில் போன்ற வேடமிட்டு நடனமாடுதல் போன்ற பல்வேறு தமிழர் பண்பாடுகளை பறைசாற்றிடும் வைகயில் கலைநிகழ்ச்சிகளும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. கடல் சாகச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வதிமான கடலோர பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.943 லட்சம் மதிப்பிலும், அம்ருட் திட்டத்தின் கீழ் ரு.392 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மேமம்பாட்டு பணிகள் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, அரியமான கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் கடற்கரைக்கான சாலையினை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்காக துணை ஜனாதிபதி வெங்கையநாயுடுவிடம் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏர்போர்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஏர்போர்ட் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏர்போர்ட் வந்துவிட்டால் எனது துறையான தகவல் தொழில்நுட்ப புங்கா அமைக்கப்படும். அதனால் வேலைவாய்ப்பு அதிகாரிக்கும். குந்துகாலில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு சாலை, குடிநீர், போக்குவரத்து வசதி மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் அருகே உள்ள புங்காவையும் புதுப்பிக்க அறிவுறுத்தி உள்ளேன். மாவட்ட வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

விழாவில் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா, மாவட்ட மத்திய கக்ஷட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!