பொங்கல் ; சொந்த ஊர் மக்கள் 5 ஆயிரம் பேருக்கு வேட்டி சேலை வழங்கிய பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. எஸ்.பிரகதீஸ்குமார்!

schedule
2024-01-14 | 20:03h
update
2024-01-14 | 20:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pongal ; International businessman DATO S PRAKADEESH KUMAR gave Dothi saree to 5000 people of his hometown!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. எஸ்.பிரகதீஸ்குமார். இவர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் சொந்த ஊரான பூலாம்பாடியில் பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி விழா கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி தொழிலதிபர் டத்தோ. எஸ்.பிரகதீஸ்குமார் மற்றும் அவரது மனைவி ரந்தினிபிரகதீஸ்குமார் மற்றும் உறவினர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பூலாம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து தொழிலதிபரை வெகுவாக பாராட்டியும், வாழ்த்தியும் சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 20:15:39
Privacy-Data & cookie usage: